நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.