கடந்த 2005-ம் ஆண்டு இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான்.

சமீபத்தில், விஷால் நடித்த அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் சனாகான். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு உலகளவில் பிரபலமடைந்தார்.

நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாக கூறிய சானாகான் , அவர் துரோகம் இழைத்துவிட்டார் பிரிந்து விட்டோம் எனவும் கூறினார் .

கடந்த மாதம் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

இந்நிலையில், தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார் சனாகான். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரும் சேர்ந்து கேக் வெட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CH2nIEJJYoZ/