அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்று அவர் முதல்நாளாக படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் சம்யுக்தாவை திரையில் காண ஆவலுடன் இருப்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.