
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக திரைத்துறை பிரபலங்கள் தெரிவிப்பதும், வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவரின் பெற்றோர்கள் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீட்டிலே இருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]