இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன.மீம்கள் ட்ரெண்டாவதன் நதி மூலம் ரிஷி மூலத்தை வரையறுத்துக் கூற முடியாது.

கடந்த ஆண்டு திடீரென்று வைரலான #prayfornesamani ஹேஷ்டேகை சுவாரஸ்யமான உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால் தற்போது நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியை வைத்து உருவாக்கப்பட்ட ட்வீட்களும் மீம்களும் ட்ரெண்டாகி வருவது எதிர்வினையாக ஆகி வருகிறது

சமுத்திரக்கனியை வைத்து உருவாக்கப்பட்ட ட்வீட்களும் மீம்களும் ட்ரெண்டாகி வருகிறது. சமுத்திரக்கனியின் திரைப்படங்களை மட்டுமல்லாமல் அவருடைய பெயரை வைத்தும் உருவத்தை மார்ஃப் செய்தும் பயன்படுத்தியும் பல மீம்கள் வைரலாகப் பரவிவருகின்றன.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்கில் இருக்கும் அனைத்து போஸ்ட்டுகளையும் கிட்டத்தட்ட பார்த்தேவிட்டோம். ஆனால் எங்களுக்கு அவர் ஏன் ட்ரெண்டாகிறார் என்ற காரணமே தெரியவில்லை..