கோவில்பட்டி:
கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் இருப்பது அமைதியான பாதைக்கு அவர்கள் திரும்ப தடையாக இருக்கிறது. ஆகவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கில் அப்பா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தியேட்டருக்கு வந்து ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த படம் யாரைப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களிடம் சென்றடைந்திருக்கிறது. நான் நினைத்திருந்ததைவிட அதிகமான மக்களை அடைந்திருக்கிறது.
சினிமா பார்முலாவிலே இல்லாத ஒரு சினிமாவை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களை எடுப்பேன்.
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு சிறுவர் இல்லங்கள் இல்லத்தில் அதிகளவில் சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அமைதியான பாதைக்கு திரும்ப முடியாமல் அதிக தவறுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களை திருத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமுத்திரக்கனி கூறினார்.