1986 ஆம் ஆண்டு குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விசு மறைவுக்கு முன்பு ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தார்.
தற்போது விசுவின் மறைவுக்குப் பிறகு, ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ உருவாகிறது. மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விசு எழுதியதுதான். இயக்கம் மட்டும் வி.எல்.பாஸ்கர் ராஜ்.
விசுவின் சம்சாரம் அது மின்சாரம் – 2 திரைப்படத்தை விசுவின் சிஷ்யன் VL. பாஸ்கர்ராஜ் இயக்குகிறார் #SamsaramAdhuMinsaram2 pic.twitter.com/rBAZ38quEW
— Diamond Babu (@idiamondbabu) November 6, 2020
இந்தப் படத்துக்கு உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா விசு பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக பரத்வாஜ், ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன், எடிட்டராக சுரேஷ் அர்ஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.