பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் கைது செய்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆர்யன் கான் சந்தேகத்திற்கு இடமின்றி நிரபராதி என்று கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இயக்குனராக இருந்த சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை அறிவித்துள்ளது.

ஆர்யன் கான் வழக்கில் சமீர் வான்கடே மீது துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அவருக்கு சுங்கத்துறையின் கீழ் எந்த இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.