சபரிமலை:
சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று அய்யப்பனைத் தரிசனம் செய்வது வழக்கம்.
சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி தொடங்கிய மண்டலக் காலத்தின் நிறைவாக இன்று மதியம் 12:30 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், சபரிமலையில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.