பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்தார்.

ஆர்யன் கானுக்கும் வெளிநாட்டு போதை மருந்து கடத்தல்காரர்களுக்குமான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கூறிவந்த நிலையில் அக்டோபர் 30-ம் தேதி ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது, வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் ரஃகோஜி சயில் “விசாரணை அதிகாரி சமீர் வான்கடே-வால் என் உயிருக்கு ஆபத்து” என்று கூறி பிரமாண பத்திரம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆர்யன் கான் வழக்கு தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் மற்றும் நடிகர் அர்மான் கோலி ஆகியோர் மீதான வழக்கு விசாரணையும் சமீர் வான்கடேவிடம் இருந்து டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]