கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது.

முன்னதாக அவர் நாக சைதன்யா மீது கொண்ட காதலால் தன் உடம்பில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் அவரின் பெயரை பச்சை குத்தினார். அதை பல நாட்கள் ரகசியமாக வைத்திருந்த சமந்தா ஒரு நாள் அனைவருக்கும் காட்டினார்.

மேலும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து நடித்த ஏ மாய சேசாவே படம் தன் வாழ்வில் முக்கியமானது என்பதால் அதை YMC என்று தன் முதுகு பகுதியில் பச்சை குத்தினார். தற்போது நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா அந்த இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.