தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

நெல்சன் இயக்கியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘அரபிக் குத்து’ பாடல் பிப்.14 ம் தேதி வெளியானது.

சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் வைரலாகி வருகிறது.

நேற்றிரவு ஏர்போர்ட் சென்ற சமந்தா தனது விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில் ‘அரபிக் குத்து’ பாடலுக்காக தனது ஸ்டைலில் நடனமாடியதோடு அந்த நடன அசைவுகளை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார்.

https://www.instagram.com/reel/CaFbWwihqJK/

புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கிறங்கடித்த நடிகை சமந்தாவின் அரபிக் குத்து நடனமும் தற்போது வைரலாகி வருகிறது.