
விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
ஜானு பட புரமோஷனில் மும்முரமாக இருப்பதால், அதற்காக பங்குபெறும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சமந்தா ஜானுவாகவே தன்னை முன்னிருத்துகிறார். சமந்தா ஆஃப் ஒயிட் புடவையில் ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து வந்தார்.
இந்த புடவை ஏற்கனவே கரீனா கபூர் ’பெபோ’ என எழுத்துக்களை பதித்துஅணிந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சேலையில் யார் சிறப்பாக தோற்றம் அளித்துள்ளார் என்று இணையத்தில் அவர்களது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Patrikai.com official YouTube Channel