சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….!

Must read

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர், அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். அதோடு, சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றினார்.

இந்த நிலையில், தற்போது சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மாற்றியிருக்கிறார். அதேசமயம், சமந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சமந்தா அக்கினேனி’ என்றுதான் இப்போதுவரை இருக்கிறது.

More articles

Latest article