டெல்லி: அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். அதுபோல சமாஜ்வாதி கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இராமர் கோயில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரம். அவரது பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ராமஜென்ம பூமி இடம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான அயோத்தி நகரத்தில் அமைந்துள்ளது.
இங்கு 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இங்கு குழந்தை ராமர், லட்சுமணன், சீதா மற்றும் அனுமன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்த விழாவுங்ககு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இந்தியா வருகை தர உள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுக அமைப்புகளை சேர்ந்தவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் என சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இதுவரை 7,000 பேருக்கு மேல் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விட்டது.
இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதிரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்புகள் குறித்து சரியான நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கடவுள் இராமரை பல லட்சம் மக்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இராமர் கோவிலை அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு திறப்புவிழா நடத்துவதற்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே காரணம். எனவே, இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதையுடன் மறுக்கின்றனர். மேலும், இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வந்தாலும், அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்தது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ராமர் கோவில் விழாவை புறக்கணித்துள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.