லக்னோ:
 
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு   கொண்டுவந்துள்ள  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் பரவி வருகின்றன. காஷ்மீர் முதல் குமரி வரை பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாண வர்களும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து உள்ளன.  ஆனால், பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என்று  அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக இன்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட் டம் நடத்த உள்ளதாக  சமாஜ்வாடி கட்சியும் வேறு சில அமைப்புகளும் அறிவித்துள்ளன.

ஆனால், உத்தரப்பிரதேச காவல்துறை,  முழு மாநிலத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

சிஆர்பிசியின் பிரிவு 144 (சட்டவிரோத சட்டசபைக்கு தடை) நடைமுறையில் உள்ளது மற்றும் இன்று (டிசம்பர் 19ந்தேத்)  எந்தவொரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தயவுசெய்து யாரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ”என்று டிஜிபி ஓ.பி. சிங்  டிவீட் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.