லக்னோ
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைப்பயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார் தற்போது இந்த நடைப்பயணம் உத்தரப் பிரதேசத்தில் நடந்து வருகிறது.
அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்குவதில் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டவில்லை கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகளை வழங்க அகிலேஷ் முன்வந்துள்ளார்.
இது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும் தொகுதிகள் வழங்கப்பட்டதும், யாத்திரையில் கலந்து கொள்வோம் எனக் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில், மொராதாபாத் மற்றும் பல்லியா போன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது.
காங்கிரஸ் கட்சி 2019 மக்களவை தேர்தலில் மொராதாபாத் தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது இந்த தொகுதியில் நடந்த மேயர் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. மேலும் பல்லியா தொகுதியும் சமாஜ்வாடி கட்சிக்கு வலிமையான தொகுதிகளில் ஒன்றாக உள்ளது.
எனவே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது,. ஏற்கனவே. காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கேட்டிருந்த நிலையில், கடைசி வாய்ப்பாக 17 தொகுதிகளை வழங்க சமாஜ்வாடி முன்வந்துள்ளது.