லக்னோ
சென்ற 2017 ஆம் வருடம் உபி முதல்வர் யோகிக்கு கருப்புக் கொடி காட்டிய பெண்ண்க்கு தற்போது தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
வரும் 10ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த 2017 ஆம் வருடம் லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வ்ர் யோகி ஆதித்யநாத்துக்க்கு பூஜா சுக்லா என்னும் 25 வயது இளம்பெண் கருப்புக் கொடி காட்டினார். பூஜா 10 பேருடன் இணைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவம் அப்போது கடும் பரபரப்பை உண்டாக்கியது. நடைபெற உள்ள தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
லக்னோ வடக்கு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் பூஜா சுக்லா, “உ பி முதல்வர் யோகிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் எங்களைக் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். நாங்கள் ஜனநாயக முறைப்படி நடத்திய இந்த போராட்டத்துக்காக சிறையில் அடைக்கப்ப்பட்டோம்.
நாங்கள் விடுதலை ஆன பிறகு சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசினோம் அவர் எனக்கு மாணவர் பிரிவில் பொறுப்பு அளித்து கட்சி பணி ஆற்ற வைத்தனர். தற்போதைய தேர்தலில் அக்கட்சியின் தலைவ்ர் அகிலேஷ் யாதவ் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். தற்போது யோகிக்கு எதிரான அலை உள்ளதா, நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.