ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏலம் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ. 16.25 கோடி வழங்கப்பட உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட 18.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன சாம் கரன் தான் இதுவரை நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
இவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் கேமரூன் க்ரீன் 17.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக பென் ஸ்டோக்ஸ் உள்ளார். நான்காவதாக ஹைதராபாத் அணிக்காக விளையாட ஹார்ரி ப்ரூக்-கிற்கு 13.25 கோடி ரூபாய் ஏலம் விடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel