டில்லி:

ன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை விமானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தலை வணங்குவதாக டிவிட் போட்டுள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று அதிகாலை ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை அதிரடி தாக்குல் நடத்தி அழித்தது.

இந்த தாக்குதல்களில்,  பாலகோட், சக்கோத்தி மற்றும் முசாஃபாபாத் பகுதிகளில் செயல்பட்டு வந்த  பயங்கரவாத ஏவுதளங்கள் அனைத்தும் இந்திய விமானப்படையின்  விமான தாக்குதல் களில் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின்  கட்டுப்பாட்டு அறைகள் விமானத் தாக்குதலின் போது அழிக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

“நான் விமானப்படை விமானிகளை வணங்குகிறேன்,” ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.