பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ரசிகர்களின் செயல்பாடுகள் தொடர்பாக சல்மான் கான் தனது ட்விட்டர் பதிவில்

“என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். சுஷாந்த் ரசிகர்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். அவர்களது சாபங்களையும் வார்த்தைகளையும் கணக்கில் கொள்ளாமல் அதன் பின்னால் இருக்கும் உணர்வைப் பாருங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு மிகவும் வலிமிக்கது என்பதால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவு தந்து அவர்களுடன் உறுதுணையாக நில்லுங்கள்”.என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]