
மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த படம் இது .
தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாராவும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ராம் சரணும், என்வி பிரசாத்தும் இணைந்து தயாரிக்க லூசிபரின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
ஸ்டன்ட் ஸில்வா சண்டைக் காட்சியை அமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் நடிகர் சல்மான் கான் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது