ஜோத்பூர்:
மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஜெயிலில் ஏற்கனவே, அடைக்கப்பட்டுள்ள கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள அறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் நடத்தி வந்த 75 வயதான ஆசாராம் பாபு என்ற சாமியார் 2 பெண்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறை தண்டனை வகித்து வருகிறார்.
இந்நிலையில், மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சல்மான்கானும், ஜோத்பூர் மத்திய சிறையில், கற்பழிப்பு சாமியார் ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள பாரக் 2 என்ற அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சல்மான்கான் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.