சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஓட்டல்கள், கோவில்கள், தியேட்டர்கள் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஆனால் வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இந் நிலையில், கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையைச் செயல்படுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரமற்ற டாஸ்மாக் பார்களை மூட வேண்டும், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளது.