சேலம்

சேலம் நகரில் ஒரு இளைஞர் ரூ. 2.50 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களாக கொடுத்து பைக் வாங்கி உள்ளார்.

சேலத்தில் அம்மாபேட்டை காந்தி மைதானத்தைச் சேர்ந்த பூபதி என்னும் இளைஞர் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவருக்கு மிக உயர்ந்த விலையில் இரு சக்கர வாகனம் வாங்க சிறு வயது முதலே ஆசை இருந்தது.  எனவே அவர் தின்சரி உண்டியலில் ஒரு ரூபாய் நாணயங்களாகச் சேர்த்து வந்தார்.

அவருக்கு பிடித்தமான இரு சக்கர வாகனத்தின் விலை ரூ.2.50 லட்சம் ஆகும்.   அவருக்கு அப்போது மொத்த பணத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து வாகனம் வாங்கலாம் என்னும் எண்ணம் தோன்றியது.   எனவே ரூ.2.50 லட்சத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களாகச் சேர்த்தார்.  அதே வேளையில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் இந்த ஒரு ரூபாய நாணயங்களை வாங்க முன் வரவில்லை.

இறுதியாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் ஒரு இரு சக்கர வாகன விற்பனையாளர் இதை ஒப்புக் கொண்டார்.  பூபதி தான் சேகரித்து வைத்திருந்த ரூ.1 நாணயங்களை மூட்டைகளாகக் கட்டி எடுத்து வந்தார்.   அந்த நாணங்களை நிறுவன ஊழியர்கள் 10 மணி நேரம் எண்ணி உள்ளனர்.   பூபதி தற்போது தனது விருப்பப்படி ரு.2.50 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை வாங்கி உள்ளார்.

[youtube-feed feed=1]