சேலம்,
சேலம் ரெட்டியூரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியானார்கள்.
சேலம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள ரெட்டியர் பெருமாள் கவுண்டர் காலனியை பகுதியை சேர்ந்த சீனிவாசன் வீடு கட்டி வருகிறார்.
வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக 10 அடி ஆழத்திலும், 5 அடி அகலத்திலும் குழி தோண்டி, அதற்கு மேலே  சிமெண்ட் சிலாப் அமைத்து கம்புகளை வைத்து சாரம் கட்டி இருந்தனர்.

பலியான தொழிலாளர்கள்
பலியான தொழிலாளர்கள்

சிமெண்ட் சிலாப் அமைத்து 10 நாட்கள் ஆகிவிட்டதால், சாரத்தை பிரிக்க சென்ற தொழிலாளர்கள் 3 பேர்  அந்த குழிக்குள் இறங்கினார்கள்.
முதலில் சேலத்தை அடுத்த கருப்பூர் பல்லக்காடு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (வயது35) என்ற தொழிலாளி இறங்கினார். அவரை தொட்டிக்குள் இருந்த விஷவாயு தாக்கியதால், சத்தம் போட்டு மயங்கி விழுந்தார்.
அவருடன் வேலைக்கு வந்த மற்ற இருவர்களான ராஜாவும், மணியும்  குழிக்குள் இறங்கி சத்தியராஜை மீட்னர். ஆனால், எதிர்பாராதவிதமாக  ராஜாவும் மணியும் விஷவாயுவின் தாக்கத்தால் இறந்து விட்டனர்.
முதலில் இறங்கிய சத்தியராஜை மற்ற தொழிலாளர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால், அவரை காப்பாற்ற சென்ற மன்ற இருவரும் பரிதாபமாக பலியானர்கள்.
சத்தியராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.