சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்து மரணம் குறித்து காவல்துறை யினர் மறுவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது எடப்பாடி பழனிச்சாமி அன் கோவிற்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு பங்களா கொள்ளையின்போது, பங்களா காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜெயலலிதா வின் கார் டிரைவர் கனராஜூக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படட்டது. இதுகுறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் உள்பட 6 பேர் இந்த கொலையில் சிக்கினர். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கார் ஓட்டுநர் கனகராஜ் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சேலம் அருகே சாலை 2017ம் ஆண்டு ஏப்ரல் 29ந்தேதி அன்று விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், காவரது மரணம் விபத்தாக கருதி முடித்து வைக்கப்பட்டது.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளான சயான், மனோஜ் உள்பட பலர், இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு எடப்பாடி அன் கோ காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்களை திரட்டி வரும் காவல்துறையினர், தற்போது கனகராஜ் விபத்து மரணம் குறித்த வழக்கையும் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
கனகராஜின் அபாயகரமான விபத்து மரணம் தொடர்பான விசாரணைகளை சேலம் காவல்துறையினர் மீண்டும் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். இது எடப்பாடி அன் கோவிற்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.