சேலம்:

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தினமும் 120 முகாம் நடத்தி அனைவருக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சளி பரிசோதனை எடுக்கப்பட்டு அந்த முடிவுகள் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் 24 மணி நேர உதவி மையம் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆட்சியர் சி.அ.ராமன் அலுவகத்தை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளார்.