கொழும்பு:
இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரை செயப்பட்டுள்ளது.

இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயாவின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் பதவிக்கு 113 எம்பிக்கள் ஆதரவு தேவை உள்ள நிலையில் சஜித்பிரேமதாசவின் கட்சியில் 50 எம்பிக்கள் உள்ளன ர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel