புதுடெல்லி:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது.

பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் பிரிவு – கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்ற நிலையில் உள்ள வீர‌ர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இரண்டாம் பிரிவு- கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தீவிர அறிகுறிகள் கொண்ட வீர‌ர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

மூன்றாம் பிரிவு – கொரோனா குணமானதற்கு பின் எழும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களின் கீழ், வீர‌ர்களை கண்காணித்து, படிப்படியாக போட்டிக்கு திரும்ப வழிவகை செய்யுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.ஒவ்வொரு விளையாட்டு மையங்களிலும் இதற்காக பிரத்யேக மருத்துவ குழுவை நியமித்து, மேற்கண்ட கண்காணிப்பை அமல்படுத்தவும் விளையாட்டு ஆணையம், முயற்சி மேற்கொண்டு வருகிறது.