தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹைதராபாத், மாதாப்பூரில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

சுயநினைவை இழந்த நிலையில், அவர் மாதப்பூரில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் (Medicover Hospital) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு (Apollo Hospitals) மாற்றப்படுவார் என கூறப்பட்டது.

இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து இரவு 8.30 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தார். மேலும் நடிகர் சாய் தரம் தேஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்த முக்கிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய் தரம் தேஜின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு இடையிலான எலும்பு முறிவு பலதுறை சார்ந்த மருத்துவர்களின் உதவியோடு சரிசெய்யப்பட்டது, தொடர்ந்து நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.