துபாய்: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மும்பை அணி நிர்வாகம் ‘ஸ்மார்ட் ரிங்’ என்ற உத்தியை கையில் எடுத்துள்ளது.
இந்தவகை மோதிரம், அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து வீரர்கள் பயன்படுத்துவதாகும். இந்த மோதிரம் பயன்படுத்துவதன் மூலம், உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்குடன் தகவல்களாக கிடைக்கும்.
இந்த மோதிரம், அணிந்துள்ளவர்களின் இதயத் துடிப்பு, சுவாச விகிதம், உடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சோதித்து, அவற்றை தகவல்களாக அளிக்கும்.
இதன்மூலம், துவக்கத்திலேயே நாம் பிரச்சினையை கண்டறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம், புளூடூத் உதவியுடன் இயங்கும் ‘கான்டாக்ட் டிரேசிங் டிவைஸ்’ என்றழைக்கப்படும் சாதனம், அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.