சென்னை: 58 பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு  வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் எனப்படும் டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். இது   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கொடூர குண்டுவெடிப்பில், 5 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 56 பேர்  கொல்லப்பட்டனர். மேலும் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவை மாநகரமே  ரத்தகளறியாக காணப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பை கேரளாவைச் சேர்ந்த  மக்கள் ஜனநாயக கட்சி  மற்றும் தமிழ்நாட்டில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாலும் அரங்கேற்றப்பட்டது. இதில் முக்கிய  குற்றவாளிகளாக, அப்துல் நாசர் மதானி  மற்றும், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்பட  அவர்களது  குழுவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்.14-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 7, 2002 அன்று தொடங்கியது மற்றும் 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ. பாஷா, 1998 பிப்ரவரி 14 அன்று அங்கு தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளைத் தூண்டுவதற்கு குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியதாகக் கண்டறி யப்பட்டு, 12 பேருடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த வழக்கில்,   முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த  முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான   சாதிக் என்ற டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாதிக் தற்போது சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.

58பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு தினம் இன்று: பாஜக சார்பில் கோவையில் மவுன அஞ்சலி…

Coimbatore blasts Accused arrested கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி கைது