மீண்டும் லண்டன் மேயராக சாதிக் கான் தேர்வு

Must read

ண்டன்

லண்டன் மாநகராட்சி தேர்தலில் மேயராக இரண்டாம் முறையாக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று பிரிட்டனில் மாநகராட்சி தேர்தல் நடந்தது.  இதில் லண்டன் மாநகராட்சியில் ஏற்கனவே மேயராக உள்ள சாதிக்கான் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார்.  அவருக்கு எதிராக கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளாரன் ஷான் பெய்லி களத்தில் இறங்கினார்.

இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  சென்ற 2016 தேர்தலை விட தற்போது 42% வாக்குகள் குறைவாக பதிவானது.   பல மாநகராட்சிகளில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது.   ஆயினும் லண்டன் மாநகராட்சியில் சாதிக் கான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷான் பெய்ல்;இயை விட சுமார் 2.20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்ரி அடைந்தார்.

ஏற்கனவே 2016 முதல் தலைநகரின் முதல் முஸலிம் மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் மேயர் ஆகி உள்ளார்.   ஏற்கனவே ஆளும் கட்சியின் பல திட்டங்களை ஏற்காத சாதிக் கான் செயல்படுத்தவில்லை.   இது நாட்டு மக்களிடையே பெரும் குறையாகப் பேசப்பட்டது.   பல முறை அரசுக்கும் மேயருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது.

இது குறித்துச் சாதிக் கான் போரிஸ் ஜான்சன் அரசுடன் தாம் இணைந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் இனி சாதிக் கான அரசுடன் ஒத்துழைப்பேன் எனவும் பழைய நிலை மீண்டும் தொடராது எனவும்  மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

More articles

Latest article