மும்பை
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளை இர்னடு இன்னிங்சாக பிரிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது 50 ஓவர்களைக் கொண்டதாகும். டாசில் வெற்றி பெறும் அணி முதலில் பந்து வீச்சு அல்லது பேட்டிங்கை தேர்வு செய்யும். பேட்டிங்கில் முதலில் களம் இறங்கும் அணி அதிக பட்சமாக 50 ஓவர்கள் வரை விளையாட முடியும். அதற்குள் அனைவரும் ஆட்டமிழந்தால் அடுத்த அணி 50 ஓவர்கள் வரை விளையாட முடியும்.
ஒரு காலத்தில் இளம்புயல் என புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். சுமார் 46 வயதாகும் இவர் 463 போட்டிகளில் 18426 ரன்கள் எடுத்து முன்னிலை வகித்தவர் ஆவார். இவர் சமீபத்தில் ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தற்போதைய சர்வதேச ஒரு நாள் போட்டியை சுவாரசியம் ஆக்க ஒரு யோசனை தெரித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், “சரவதேச் ஒரு நாள் போட்டிகளை இரண்டு இன்னிங்ஸாக நடத்த வேண்டும். ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் இடையில் 15 நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டும். இவ்வாறு 50 ஓவர் போட்டியில் ஏ அணி மற்றும் பி அணி விளையாடுகிறது என்றால் ஏ அணி டாஸ் வென்றால், முதலில் 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பி அணி 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதன்பின் ஏ அணி 25 ஓவர்களில் என்ன நிலையில் இருந்ததோ, அதில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்து ஆட்டத்தை முடித்த பின் பி அணி தொடர வேண்டும். ஆனால் 25 ஓவர்களுக்குள் ஏ அணி அனைத்து விக்கட்டுகளையும் இழக்க நேரிட்டால் பி அணி 50 ஓவர்கள் தொடர்ச்சியாக விளையாடி இலக்கை எட்டலாம்” எனத் தெரிவித்துள்ளார்.