டில்லி:

கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற நிகழ்வின் போது ராஜ்யசபா சமாஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் பேசுகையில்,‘‘ கூட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் இல்லாத நியமன எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த கூட்டத் தொடர் முடிவுறும் நிலையில் அவர்கள் டெண்டுல்கர், ரேகா உள்ளிட்ட பலரை கூட்டங்களில் பார்க்க முடியவில்லை’’ என்று நேற்று பேசினார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்திலும் இவர் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா நிகழ்வில் டெண்டுல்கர் கலந்துகொண்டு நிகழ்வுகளை கவனித்தார்.

நரேஷ் அகர்வால் விமர்சனம் காரணமாகவே டெண்டுல்கர் இன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.