சிட்னி: ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் ஷேன் வார்ன் தேர்வுசெய்த ஒருநாள் ‘கனவு’ அணியில், இந்திய முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேவாக் இடம்பெற்றுள்ளனர்.

தனது அணிக்கான துவக்க வீரர்களாக, ஷேவாக் மற்றும் இலங்கையின் ஜெயசூர்யாவை தேர்வுசெய்துள்ளார் ஷேன் வார்ன். மிடில் ஆர்டரில் சச்சின் இடம்பெற்றுள்ளார்.

இவரின் ஒருநாள் ‘கனவு’ அணி விபரம்; சச்சின், ஷேவாக்(இந்தியா), பீட்டர்சன், பிளின்டாப்(இங்கிலாந்து), ஜெயசூர்யா, சங்ககாரா(இலங்கை), பிரைன் லாரா, அம்புரோஸ்(விண்டீஸ்), வாசிம் அக்ரம், சோயப் அக்தர்(பாகிஸ்தான்), வெட்டோரி(நியூலாந்து) ஆகியோர்.

மேலும், இவர் தனது ‘கனவு’ ஐபிஎல் அணியையும் தேர்வுசெய்துள்ளார். ஆனால், அதில் சச்சினுக்கு இடமளிக்கப்படவில்லை. மாறாக, ‍ஷேவாக் மற்றும் விராத் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

[youtube-feed feed=1]