பரிமலை

பரிமலையில் விற்கப்படும் அரவணைப் பாயசம் மற்றும் அப்பம் ஆகியவற்றின் தரம் மற்றும் சுவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கேரளாவின் புகழ்பெற்ற கோவிலான சபரிமலைக்கு நாடெங்கும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.   இங்கு விற்கப்படும் அரவணைப் பாயசம் மற்றும் அப்பம் ஆகிய பிரசாதங்களை வாங்கி எடுத்துச் செல்கின்றனர்.      சபரிமலை சென்று வரும் பக்தர்கள் குறைந்த பட்சம் ஒரு டப்பா அரவணைப் பாயசமாவது வாங்குவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் விற்கப்பட்டும் லட்டு மற்றும் பழனி பஞ்சாமிருதம் ஆகிய பிரசாதங்களின் சுவை மற்றும் தரத்தை அதிகரிக்க மத்திய உணவு தொழில் நுட்பத்துறை ஆராய்ச்சி நிலையம் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது.   தற்போது சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்ட் அந்த நிறுவனத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வர உள்ளது.   அந்த நிறுவனம் வழங்க உள்ள ஆலோசனைப்படி அரவணை மற்றும் அப்பம் தயாரிப்பில் கோவில் நிர்வாகம் மாறுதல்களை செய்ய உள்ளது.   இதன் மூலம் இந்த பிரசாதங்கள் நீண்ட நாள் கெடாமலும் மேலும் சுகாதாரத்துடனும் இருக்கும் என கூறப்படுகிறது.