பரிமலை

நேற்று சபரிமலை தரிசன முன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஜன்வரி 1 மற்றும் 14 ஆம் தேதிக்கான பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட உள்ளது.   பக்தர்கள் தரிசனம் செய்ய நவம்பர் 16 முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.  மண்டல பூஜை நிறைவடைந்து டிசமபர் 6 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகர விளக்குக்கு டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி நடை அடைக்கப்பட உள்ளது.   ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தரிசனம் நடக்க உள்ளது.   இந்த 61 நாள் தரிசனத்துக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.  சில மணி  நேரத்திலேயே ஜனவரி முதல் தேதி அன்றும் ஜனவரி 14 ஆம் தேதி அன்றும் முன்பதிவு முடிவடைந்துள்ளது.

சபரிமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் sabarialai.org என்னும் இணைய தளத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.  தினசரி 25000 பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.   தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்துக்குட்பட்ட கொரோனா சோதனை நெகடிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.