சபரிமலை
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு நிறைவடந்ததால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அய்யப்பன் கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் கடந்த 2 நாட்களில் மட்டும்.80 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 5-ந்தேதி வரை 20 நாட்களில் அப்பம், அரவணை மொத்த வருவாய் ரூ.60 கோடியே 54 லட்சத்து 95 ஆயிரத்து 40 கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..
வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜை நாள் வரை முன்பதிவு நிறைவடைந்து விட்டது. எனவே உடனடி தரிசன முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் உடனடி தரிசன முன்பதிவுக்கு தினசரி 10 ஆயிரம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளதால் கடந்த 3 நாட்களாக சராசரியாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவ ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாடுகளை தளர்த்தி கூடுதல் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[youtube-feed feed=1]