சபரிமலை
இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்கள், மண்டல பூஜை, மகரவிளக்கு ஆகிய காலங்களைத் தவிர மற்ற நாட்களில் இக்கோவில் நடை திறப்பது கிடையாது.
தற்போது ஐப்பசி மாதம் பிறப்பதால் இன்று மாலை சபரிமலை கோவில் நடை பூஜைகளுக்காகத் திறக்கப்பட உள்ளது. தந்திரி தண்டரரு மகேஷ் மோனாரு தலைமையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 5 மணிக்கு நடை திறக்கிறார். இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.
நாளைக் காலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. அதன் பிறகு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை ஆலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியவை நடைபெறா உள்ளன. வரும் 22 ஆம் தேதி இரவு 10 மணிக்கு இந்த மாதத்துக்கான பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட உள்ளது.