சபரிமலை:
சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது.
இந்தாண்டு நிறை புத்தரிசி பூஜை நாளை 10ம்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
நாளை காலை 5.45 முதல் 6.15 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel