சபரிமலை:
பரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று டிச., 26ம் தேதி நடைபெறுகிறது. கடந்த மாதம் 15ல் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இன்று மதியம் மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

வழக்கமான பூஜைகள் நடந்த பின்பு இன்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அடுத்து மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஜனவரி 14ம் தேதி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.