சென்னை: சபரிமலை மண்டல பூஜை நெருங்குவதையொட்டி, சென்னையில் இருந்து கொல்லத்துக்கு சிறப்புரயிலை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்து உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலையில் பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
சென்னை எழும்பூர்-கொல்லம் (06061) இடையே புதன்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
கொல்லம்-எழும்பூர் (06062) இடையே வியாழக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 24-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
எழும்பூர்-கொல்லம் (06063) இடையே வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18, 25-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
கொல்லம்-எழும்பூர் (06064) இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
எழும்பூர்-கொல்லம் (06065) இடையே திங்கட்கிழமைகளில் மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2, 9, 16, 23-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
கொல்லம்-எழும்பூர் (06066) இடையே செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 22, 29-ந்தேதிகளிலும், டிசம்பர் மாதம் 6, 13, 20, 27-ந்தேதிகளிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3, 10, 17, 24-ந்தேதிகளிலும் இயக்கப்படும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.