திருவனந்தபுரம்:

பரிமலை விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் அதிகரித்து வரும் போராட்டம், பதற்றம், வன்முறை குறித்து ஆளுநர் சதாசிவம் கேரள மாநில அரசிடம் அறிக்கை கோரி உள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை  விவகாரம் கேரளாவில் நீருபூத்த நெருப்பு போன்று கனகனவென்று தகித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசு 2 பெண்களை காவல்துறை அனுமதியுடன் அதிகாலையில் சன்னித்தானத்திற்குள் அழைத்துச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. போராட்டத்துக்கு பாஜக காங்கிரஸ் உள்பட இந்துரு அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.  அப்போது, கோழிக்கோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வன்முறை மூண்டது.  பல இடங்களில் வன்முறைகள் நடந்தேறியது. காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக் கார்களை அப்புறப்படுத்தினர். மேலும் வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டதாக 750க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  வன்முறை  தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் பினராயி விஜயனிடம் ஆளுநர் சதாசிவம் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், ‘ கலவரம் காரணமாக ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் அறிக்கை அளிக்க வேண்டு மெனவும், அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார்.