சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர், சிலர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த நவ.,15ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. மறுநாள் மண்டல கால பூஜைகள் ஆரம்பித்தது. 41 நாள் நீடிக்கும் மண்டல காலம் நாளை (திங்கள் கிழமை)யுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஆரண்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கிளம்பிய தங்க அங்கி ஊர்வலம் நேற்று பம்பை வந்து சேர்ந்து.. . தங்க அங்கி நேற்று மாலை 6.30 மணிக்கு மாலிகபுரம் தேவி கோயில் அருகே வந்தது. தங்க அங்கியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் முட்டி மோதியதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சன்னிதானத்தில் உல்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமானது. இதையயடுத்து அவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். .
இது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தெரிவித்ததாவது:
சபரிமலை சன்னிதானம் மற்றும் மாலிகபுரம் இடையே கட்டப்பட்டு இருந்த கயிற்று தடுப்பில் பக்தர்கள் சிக்கி திடீர் நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென தடுப்புகள் சரிந்தது. இதனால் , பக்தர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதையடுத்து, அடுத்தடுத்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சரிந்ததால், கடும் ரிசல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த பக்தரிகளில் பெரும்பாலானவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பக்தர்கள் சன்னிதானம் செல்ல கடும் கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
இதற்கிடையே, கவலைக்கிடமான நிலையில், அவர்கள் கோட்டயம் மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் சிலர் மரணமடைந்ததாக தகவல் பரவி பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த செய்தியை சபரிமலை தேவஸ்தானமோ, கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோ உறுதிப்படுத்தவில்லை.