திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குவதை யொட்டி, இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, நாளை அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் அன்றைய தினம் இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மாா்ச் 26-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். பக்தர்கள் எப்போதும் போல சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தரலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளத.
Patrikai.com official YouTube Channel