சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வருடம்தோறும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
மண்டல பூஜைக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை கோயில் நடை, மகரவிளக்குப் பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இன்று காலை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்ந்த நேரத்தில், ஐயப்பனுக்கு மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை சன்னிதானத்திற்கு திருவாபரணப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவித்தலும், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
அப்போது, பொன்னம்பலமேட்டில் ஜோதிவடிவில் ஐயப்பன், பக்தர்களுக்கு 3 முறை காட்சி அளிபப்தாக ஐதீகம். இந்த மகர ஜோதியை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருக்கிறார்கள்.