மும்பை:
ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பிசிசிஐயின் பொதுமேலாளருமான சபா கரீம்,  தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகரளை புரட்டிப்போட்டுள்ள நிலையில், சர்வதேச விளை யாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும், நடைபெற இருந்த ஐபிஎல்  போட்டி உள்பட பல்வேறு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால்,   ஒத்தி வைக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் நடத்துவது,  மற்றும் புதிய போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் உள்ளது. இது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிசிசிஐ வளர்ச்சிக்கு அதன் பொதுச்செயலாளர் சபாஹரீம் எந்தவொரு ஆக்கப்பூர்வமா நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் சபா கரீம் பிசிசிஐயின் பொதுமேலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து,  பதவி விலகல் கடிதத்தை நிர்வாகிகளுக்கு சபா கரீம் அனுப்பி வைத்துள்ளார்.
சபா கரீம் இந்திய கிரிக்கெட் அணியில்  கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.  முன்னாள் வீரரான இவர்  இந்தியாவிற்காக 34 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]