சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆயுதங்களுடன் அமர்ந்திருக்கின்றனர் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன். இந்த மோஸ்ட் வான்டட் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

இப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து சாணிக்காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் புகைத்தபடி கையில் துப்பாக்கியுடன் நடிகர் செல்வராகவன் அமர்ந்திருக்க அவருக்கு அருகே ரத்தக் கறை படிந்த கால்கள் இருக்கின்றன.

இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், உங்களை ஒரு அற்புதமான இயக்குநராக அறிந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது ஒரு மிகச் சிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]